தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஹீரோயின்கள் தற்போது என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பலருக்கு தெரியாதவாறு இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள்.
அந்த வரிசையில் ஈரமான ரோஜாவே படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த நடிகை மோகினி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.
ஈரமான ரோஜாவே படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான நாடோடி பாட்டுக்காரன், உனக்காக பிறந்தேன், உடன்பிறப்பு, புதிய மனிதர்கள், ஜமீன் கோட்டை, சேரன் சோழன் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த மோகினி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
மேலும் இந்து மதத்தை சேர்ந்த மோகினி கிறிஸ்டியன் மதத்திற்கு மாறினார். பல நாட்களாக இவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்த இந்நிலையில் தற்போது தன் கணவர் மற்றும் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மோகினி.
இந்தப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமால் மாறிவிட்டார். படத்தில் நடிக்கும் போது அவ்வளவு ஸ்லிம்மாக இருந்த இவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதிவிட்டார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.