சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஜப்பான்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.
கார்த்தி நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரியாணி’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், ராம்கி, நாசர், சம்பத் ராஜ், சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், பிரேம், மாண்டி தாக்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இன்றுடன் (டிசம்பர் 20-ஆம் தேதி) இந்த படம் வெளி வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#9YearsOfBiriyani’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.45 கோடி வசூல் செய்ததாம்.