Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • November 14, 2023 / 06:02 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ஜப்பான்’ படம் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.17.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus