Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

  • November 9, 2023 / 09:07 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜப்பான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை நாளை (நவம்பர் 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags