வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் முதல் போஸ்டர் !

  • November 14, 2022 / 05:32 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வாரத்தில் வெளியான சர்தார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் சர்தார் படம் இதுவரை 100 கோடி வசூல் செய்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 25 படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது .

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜப்பான் என்று தலைப்பு வைத்துள்ளனர் . குக்கூ , ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தை இயக்க உள்ளார் . அனு இம்மானுவேல் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் .

இந்நிலையில் ஜப்பான் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது . இந்த போஸ்டரில் இரண்டு கார்த்தி வெவ்வெறு லுக்கில் உள்ளனர் .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus