கார்த்தி – பிரணிதா நடிப்பில் வெளியான ‘சகுனி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 22, 2022 / 06:29 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’ மற்றும் ‘கைதி 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜப்பான்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.

கார்த்தி நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சகுனி’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் தயாள் இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், மனோபாலா, சந்தானம், ரோஜா, நாசர், கிரண், கோட்டா சீனிவாச ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.34 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus