அடேங்கப்பா… 25 நாட்களில் கார்த்தியின் ‘சர்தார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • November 15, 2022 / 08:28 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்துள்ள புதிய படமான ‘சர்தார்’ கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 25 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.101.59 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus