அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • December 21, 2022 / 12:51 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்திருந்த ‘சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.

இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.91 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus