கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்தார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 21, 2022 / 02:06 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்துள்ள புதிய படம் ‘சர்தார்’. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus