கார்த்தியின் ‘சர்தார்’ டத்தின் சேட்டிலைட் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘கலைஞர் டிவி’?

  • October 7, 2022 / 10:39 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்துள்ள புதிய படம் ‘சர்தார்’. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘கலைஞர் டிவி’ ரூ.11 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus