கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்தார்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • October 14, 2022 / 09:24 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்துள்ள புதிய படம் ‘சர்தார்’. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus