கார்த்தி, ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் ‘சுல்தான்’… வெளியான செம்ம மாஸ் தகவல்!

  • October 16, 2020 / 03:08 PM IST

பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், கார்த்திக்கு அமைந்தது. அது தான் ‘பருத்திவீரன்’ படம். இந்த படத்தை இயக்குநர் அமீர் இயக்கியிருந்தார்.

‘பருத்திவீரன்’ ஹிட்டிற்கு பிறகு கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி’ என படங்கள் குவிந்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சுல்தான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. தற்போது, டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ ட்விட்டரில் அறிவித்துள்ளது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம்.

1

2

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.