ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ‘சுல்தான்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!
March 29, 2021 / 02:41 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 8-ஆம் தேதி ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த மார்ச் 24-ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். படத்தை வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் கார்த்தி நடித்துள்ள காட்சிகளின் மேக்கிங் வீடியோவை இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.