ரிலீஸான 3 நாட்களில் கார்த்தியின் ‘சுல்தான்’ செய்த வசூல் சாதனை!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சுல்தான்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, நெப்போலியன், லால், ஹரிஷ் பெராடி, ராமச்சந்திர ராஜு நடித்துள்ளனர்.

விவேக் – மெர்வின் இணைந்து இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர், டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இப்படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.13.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.