நடிகர் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கருணாஸின் மகன் கென் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் கருணாஸ்.
நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை அடுத்து திருடா திருடி, குத்து, வில்லன் என தொடர்ந்து இவர் நடித்த படங்களில் இவரின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது .
இதம் பின் இவர் நாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. சில ஆண்டுகள் முன் வெளியான சூரரைப்போற்று படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கருணாஸ் குடும்பத்தில் தற்போது ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது . கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்து உள்ளது . கருணாஸின் மகன் கென் தனது அக்காவின் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்கள் மாமா & அக்கா என வாழ்த்தி இருக்கிறார்.
தற்போது மேலும் சில திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது . அதில் கருணாஸின் மனைவி க்ரேஸ் கண்ணீர் விட்டு அழுகிறார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .