நயன்தாரா இடத்தில் இவரா?- கலாய்க்கும் நெட்டிசன்கள்!

  • October 27, 2020 / 10:56 PM IST

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று திரைப்படக் குழு தற்போது அறிவித்துள்ளது.‌

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் புரோடக்சன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் மாஸ் காட்டும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது வனிதா விஷயத்தில் மூக்கை நுழைத்து அதிலிருந்து பலவாறு தன் கருத்துக்களை இணையதளத்தில் பதிவிட்டு வரும் நடிகை கஸ்தூரி தற்போது “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக வந்ததை போல மேக்கப் போட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு, அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இது உங்களுக்கு தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus