கத்ரீனா கைஃப் சுறாவுடன் நீந்திய வீடியோ வைரல்!

  • June 9, 2020 / 07:04 PM IST

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் , உலக கடல் நாளான ஜூன் 8 அன்று, தான் பெரிய கடல் சுறாவுடன் நீந்திய வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இணையதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் ஒரு சுறாவின் அருகில் நீந்திக் கொண்டிருப்பார். ஆம் கடல் சுறாவேதான்! இதைப்பற்றி அவர் குறிப்பிட்டதாவது” இந்த வீடியோ நான் என் நல்ல நண்பருடன் செலவிட்ட நேரத்தை நினைவு கூறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வாக் பத்திரிகைக்கு அவர் படப்பிடிப்பு நடத்த பிலிப்பைன்ஸ் சென்ற போது(2016) எடுத்தது. இது அவருக்கு இயற்கையின் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது.

கத்ரீனா கைஃப் கடைசியாக அலி அபாஸ் ஜாவர் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து பாரத் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் அக்ஷய் குமாருடன் இணைந்து சூரியவம்ஸி என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus