“காற்றுக்கு இல்லை கருப்பு வெள்ளை” என்ற நிறவெறி சம்பவத்திற்கு எதிரான பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் யூ டியூபில் நேற்று வெளியிடப்பட்டது.
கவிப்பேரரசு வைரமுத்து அமெரிக்காவில் நடந்த நிறவெறி சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக, இந்த கறுப்பு பாடலை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் படுகொலையைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதிலும் பெரும் கிளர்ச்சி எழுந்துள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாது மற்ற பல நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கறுப்பர் இன மக்களின் சுதந்திர தாகத்தை பறைசாற்றும் வகையில் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவின் பெரும் நகரங்கள் இந்த கிளர்ச்சியால் தீக்கங்குகளால் பற்றி எரியும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலில்,
“சுவாசக் குழாயில் – யார்
சுவரொன்றை எழுப்பியது?”
” நீங்கள் பகல் நாங்கள் இரவு- இரண்டும் இல்லையேல் காலமே இல்லை”
போன்ற உணர்ச்சி மிகுந்த வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் யூ டியூபில் வைரலாகி வருகிறது.