சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆனந்தி. ‘ஈ ரோஜுல்லோ, பஸ் ஸ்டாப், ப்ரியதமா நீவச்சாத குசலம்மா, நாயக், கிரீன் சிக்னல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த ஆனந்திக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஹரிஷ் கல்யாண் படம் தான். அது தான் ‘பொறியாளன்’. ‘பொறியாளன்’ படத்துக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் நடிகை ஆனந்தியின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
‘கயல்’ படத்துக்கு பிறகு நடிகை ஆனந்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பண்டிகை, என் ஆளோட செருப்பக் காணோம், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என படங்கள் குவிந்தது.
இப்போது நடிகை ஆனந்தி நடிப்பில் தமிழில் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும், எங்கே அந்த வான், அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்சல், இராவண கோட்டம், கமலி from நடுக்காவேரி’, இயக்குநர் சேக் ஹாரிஸ் படம், தெலுங்கில் ‘ஸோம்பி ரெட்டி’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஆனந்தி தனது நீண்ட நாள் காதலர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனந்தி நடித்த ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் இயக்குநர் நவீனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவராம் சாக்ரடீஸ்.
1
2
3