சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆனந்தி. ‘ஈ ரோஜுல்லோ, பஸ் ஸ்டாப், ப்ரியதமா நீவச்சாத குசலம்மா, நாயக், கிரீன் சிக்னல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த ஆனந்திக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது ஹரிஷ் கல்யாண் படம் தான். அது தான் ‘பொறியாளன்’. ‘பொறியாளன்’ படத்துக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் நடிகை ஆனந்தியின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
‘கயல்’ படத்துக்கு பிறகு நடிகை ஆனந்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது நடிகை ஆனந்தி நடிப்பில் தமிழில் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும், எங்கே அந்த வான், அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்சல், இராவண கோட்டம்’, தெலுங்கில் ‘ஸோம்பி ரெட்டி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஸோம்பி ரெட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இன்று நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கி வருகிறார். இதில் ‘கயல்’ ஆனந்தியுடன் இணைந்து தேஜா சஜ்ஜா, தக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Witness the mayhem of #ZombieReddy first bite, unleashed by @Samanthaprabhu2.
A @PrasanthVarma film
⭐️ing @tejasajja123 @anandhiactress @DakshaOfficial
🎶@markkrobin
🎥 #Anith
💰#RajShekarVarma @AppleTreeOffl#ZombieReddyFirstBite#ZombieReddyTeaser pic.twitter.com/DIrgg8cjNY— Apple Tree Studios (@AppleTreeOffl) December 5, 2020