விக்ரம் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சாமி ஸ்கொயர் . இந்த படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கி இருந்தார் . ஷிபு தமீன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்த படத்தில் விக்ரம் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் . கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . பிரபு, பாபி சிம்ஹா மற்றும் சூரி ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் .
சாமி ஸ்கொயர் படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும் . ஆகஸ்ட் 2016 இல், இருமுகனின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, இயக்குனர் ஹரி விக்ரமுடன் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாமியின் இரண்டாவது பாகம் உருவாகிறது என்ற தகவல் வெளியாகி ராசிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது .
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் நடிகர் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் அளித்தது . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .