பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம், மாமன்னன்’ என படங்கள் குவிந்தது.
கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, கண்ணிவெடி’ , ஹிந்தியில் ‘தெறி’ ரீமேக் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
.@actor_jayamravi & #AartiRavi from the birthday celebrations of @KeerthyOfficial ❤️#KeerthySuresh #Keerthy #JayamRavi #AartiRavi #Galatta pic.twitter.com/Sv6IgPpJyr
— Galatta Media (@galattadotcom) October 19, 2023
@KeerthyOfficial's pics from her birthday party ❤️
Pretty Kitty❤️#KeerthySuresh pic.twitter.com/XLdSxTtyIU
— ❤Selva (@iam_strganesh) October 18, 2023