கீர்த்தி சுரேஷின் வைரலாகும் சிறுவயது புகைப்படம்!

  • September 8, 2020 / 10:32 PM IST

2015ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானாசேர்ந்தகூட்டம், விக்ரமுடன் சாமி2, விஷாலுடன் சண்டக்கோழி 2, மீண்டும் விஜய்யுடன் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான ஈஷாவர் கார்த்திக் இயக்கத்தில் “பெண்குயின்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வரும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிறு வயதில் இவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் மோகன்லாலுடன் சிறு வயதில் இவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus