கீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த தயாரிப்பு நிறுவனம்!

  • March 1, 2021 / 11:06 AM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், குட் லக் சகி, ரங் தே, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘குட் லக் சகி’ என்ற படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் ரெடியாகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தை இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இயக்கி வருகிறார். இதில் முக்கிய ரோல்களில் ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இதற்கு சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை சுதீர் சந்திரா பதிரி தனது ‘வொர்த் ஏ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் 15-ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி (தமிழ் வெர்ஷன்), பிரபாஸ் (தெலுங்கு வெர்ஷன்), ப்ரித்விராஜ் (மலையாள வெர்ஷன்) ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus