நானியின் ‘தசரா’வுக்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • March 15, 2023 / 10:48 AM IST

பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.

அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம்’ என படங்கள் குவிந்தது.

கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தசரா’ படத்தில் ஹீரோவாக நானி நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியுள்ளார். படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus