‘கே.ஜி.எஃப் 2’வில் ‘அதீரா’வாக மிரட்டும் சஞ்சய் தத்… ரிலீஸானது கேரக்டர் போஸ்டர்!

  • July 29, 2020 / 12:00 PM IST

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சஞ்சய் தத்துக்கு இன்று (ஜூலை 29-ஆம் தேதி) பிறந்த நாளாம். இப்போது சஞ்சய் தத் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம்.

மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சஞ்சய் தத்தின் பர்த்டே ட்ரீட்டாக ‘ கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் (ஹோம்பேல் ஃபிலிம்ஸ்) ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளது. இதனால் சஞ்சய் தத்தின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இப்படத்தில் சஞ்சய் தத்திற்கு ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோல் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus