நடிகர் ” யஷை வைத்து இயக்கும் தமிழ் பட இயக்குநர் ?

  • February 11, 2023 / 09:39 AM IST

நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது . கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . இந்த படம் மூலம் இந்திய அளவில் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து உள்ளது .

கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பிறகு நடிகர் யஷ் எந்த இயக்குநருடன் இணைவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது . இந்நிலையில் இரும்புத்திரை , சர்தார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பி.எஸ் .மித்ரன் நடிகர் யஷை சந்தித்து கதை கூறி உள்ளார் . நடிகர் யஷுக்கு கதை பிடித்து போய்விட்டதாகவும் விரைவில் இதன் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus