உலக அளவில் சாதனை செய்த கே.ஜி.எஃப் !

  • July 7, 2022 / 10:08 AM IST

நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல்
இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது .

இந்நிலையில் கே.ஜி.எஃப் -1 படத்தை போஜ்புரி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிட்டு உள்ளனர் . தற்போது வரை 600 மில்லியன் பார்வையாளர்கள் போஜ்புரி மொழியில் கே.ஜி.எஃப் படத்தை பார்த்துள்ளனர் . உலக அளவில் எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவிற்கு பார்வைகளை இதுவரை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus