உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ‘கே.ஜி.எஃப்’ பட நடிகர் காலமானார்!

  • December 7, 2022 / 11:43 PM IST

கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான படங்கள் ‘கே.ஜி.எஃப் – 1 & 2’. இதில் ஹீரோவாக யாஷ் நடித்திருந்தார், இதனை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

‘கே.ஜி.எஃப்’-யில் முக்கிய ரோலில் கிருஷ்ணாஜி ராவ் என்பவர் நடித்திருந்தார். இவர் கன்னடத்தில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார், மேலும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

‘கே.ஜி.எஃப்’-க்கு பிறகு நடிகர் கிருஷ்ணாஜி ராவ் ‘நனோ நாராயணப்பா’ என்ற கன்னட படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். குமார் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கிருஷ்ணாஜி ராவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி கிருஷ்ணாஜி ராவ் காலமானார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus