கேஜிஎஃப் படத்தை ஒளிபரப்பிய சேனல் மீது வழக்கு

  • May 11, 2020 / 06:27 AM IST

தெலுங்கு உள்ளூர் சேனல் ஒன்று உரிமம் பெறாமல் கேஜிஎஃப் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்துள்ளதால் வழக்கு போடவுள்ளதாக கேஜிஎஃப் கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டரில்,தெலுங்கு உள்ளூர் சேனல் கேஜிஎஃப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இயக்குகிறது. நாங்கள் அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாக வழக்கு தொடருவேன். செயற்கைக்கோள் ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கேபிள் சேனல் இதுபோல் செய்வது கண்டிக்கதக்கது. அந்த சேனல் திரைபடத்தை ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள், வீடியோக்களும் உள்ளன.

லாக்டவுன் பிரச்சனை, திரையரங்குகள் மீண்டும் திறப்பது தொடர்பான பிரச்சனை என கேஜிஎ-ப்2 திரைப்படம் வெளியிடுவதில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், தயாரிப்பாளர் தரப்பு பல மடங்கு நஷ்டத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 15ம் தேதி கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்குள் திரையரங்குகள் தயாராகுமா, அப்படி ஆனாலும் அரசின் பல மடங்கு கட்டுப்பாட்டு பிரச்சனையால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர். மேலும் படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய முயற்சிகள் நடப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த ஒளிபரப்பு பிரச்சனையை படக்குழுவினரே பெெருசாக்குவதாக கருதப்படுகின்றன.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus