கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. கடந்த ஆண்டு (2022) இப்படத்தின் பார்ட் 2 கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.
மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, யாஷின் 19-வது படத்துக்கு ‘TOXIC’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை யாஷே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இதன் அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனை ‘KVN புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் யாஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கிறார்.