‘கே.ஜி.எஃப்’ யாஷுடன் கைகோர்க்கும் இயக்குநர் ஷங்கர்… இப்படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

  • September 12, 2022 / 10:09 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார். ஹிந்தி மொழியில் உருவாக உள்ள படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். .

இந்நிலையில், ஷங்கர் ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.

இதன் பட்ஜெட் ரூ.1000 கோடியாம். இதனை ‘நெட்ஃப்ளிக்ஸ் – தர்மா புரொடக்ஷன்ஸ் – பென் மூவிஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus