இது நம்ம குஷ்பூவா, இல்ல அமீர் கானா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

  • July 22, 2020 / 01:42 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பூ, அதன் பிறகு ‘வருஷம் 16, வெற்றி விழா, சின்ன தம்பி’ போன்ற பல படங்களில் நடித்தார். இப்போது ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ.

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

தற்போது, குஷ்பூ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நான் ஒரு ஆணாக இருந்தால்.. அவ்வளவு மோசமாக இல்லை” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘ஃபேஸ் ஆப்’ மூலம் தன் புகைப்படத்தை ஆண் உருவத்தில் மாற்றி குஷ்பூ ஷேரிட்டுள்ள இப்புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக்ஸ் போட்ட வண்ணமுள்ளனர். மேலும், சிலர் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் சாயலில் இருக்கிறீர்கள் என்று கமென்ட் போட்டுள்ளனர்.

https://twitter.com/khushsundar/status/1285524642279522306

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus