தனது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை வெளியிட்ட கியாரா அத்வானி!

  • February 23, 2023 / 12:49 AM IST

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவருக்கு ஹிந்தியில் அமைந்த முதல் படம் ‘FUGLY’. இதனைத் தொடர்ந்து ‘M.S.தோனி’ படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘M.S.தோனி’ படத்துக்கு பிறகு நடிகை கியாரா அத்வானிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி படங்கள் குவிந்தது. இப்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படமான ‘RC15’-ல் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

இதில் ஹீரோவாக ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகுமாம்.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை கியாரா அத்வானி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus