கோடியில் ஒருவன் படத்தின் டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

  • October 3, 2022 / 01:25 AM IST

2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் திரில்லர் திரைப்படம் கோடியில் ஒருவன் . இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருந்தார் மேலும் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து இருந்தது .

இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆகியோர் முதன்மையான பாத்திரத்தில் நடித்து இருந்தனர் . நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். படம் 17 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.இந்தப் படம் வெளியானவுடன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, விஜய் ஆண்டனியின் நடிப்பு, இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகளைப் ரசிகர்களால் பாராட்டப்பட்டது .


இப்படம் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளில் விஜய ராகவன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது, அதே சமயம் மலையாள டப்பிங் பதிப்பு கோடியில் ஒருவன் என்ற தலைப்பிலே வெளியாகி இருந்தது . இந்நிலையில் கோடியில் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை 3 கோடி ரூபாய்க்கு விற்று உள்ளது படக்குழு என்ற செய்தி வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus