ஊரடங்கு கால வாழ்க்கையை மையமாக வைத்து கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படத்தை சாந்தனு பாக்யராஜ் இயக்கி வெளியிட்டுள்ளார்.
கரோனா காலத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் கரோனோ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாடல்கள், வீடியோக்கள், குறும்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது காதல் மனைவி கீர்த்தியும் அவ்வப்போது டிக் டாக் வீடியோ மூலம் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது நிலவி வரும் கரோனாவை எவ்வாறு சமாளிப்பது, குடும்ப சூழலை மையக்கருத்தாக கொண்டு ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் சாந்தனு பாக்யராஜ். சுமார் ஏழரை நிமிடம் ஓடக்கூடிய
இந்தக் குறும்படத்தில், ஊரடங்கு நேரத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்துவது, வீட்டு பெண்களுக்கு உதவுவது உள்ளிட்டவை பற்றி
பேசுகிறது.
இந்தக் குறும்படத்தை முழுக்க முழுக்க செல்போனிலே படம்பிடித்துள்ளனர். சமூகவலைதளத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைப் பார்த்த பலரும் இந்த சாந்தனுவுக்குள்ளே என்னவோ இருந்திருக்கு பாரேன். பாக்யராஜ் மகனாச்சே என்று பாராட்டி வருகின்றனர்.