தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி அவர்களின் மகனான அதர்வா முரளி தற்போது அனைவரும் ரசிக்கப்படும் ஒரு நடிகராக வளர்ந்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமான அதர்வா முரளி முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள், பூமராங் ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இவர் தற்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
ராக் போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Proudly presenting the #KuruthiAattamFirstLook
Our FIRST production, directed by @sri_sriganesh89.
A @thisisysr MUSICAL
@Atharvaamurali @priya_Bshankar @realradikaa @Vatsanhere @FiveStarAudioIn @kbsriram16 @DoneChannel1 @APVMaran @Karthikravivarm pic.twitter.com/OkM8iJixfn
— RockFort Entertainment (@Rockfortent) December 8, 2020