அடேங்கப்பா… சிவாவின் ‘அண்ணாத்த’யில் நடிக்க குஷ்பூ – மீனா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • November 20, 2021 / 03:20 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை குஷ்பூ ரூ.75 லட்சமும், நடிகை மீனா ரூ.50 லட்சமும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus