குஷ்பு வைரமுத்துவை தொடர்ந்து கமல் ஆதரவு தெரிவித்துள்ள மத்திய அரசின் திட்டம்!

  • July 30, 2020 / 10:10 PM IST

மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய கல்வித் திட்டத்திற்கு பலரும் தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் மாறிமாறி தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை அனைவரும் வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து இந்த திட்டத்தை பற்றிய தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது ” ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை அனைத்து வகை பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்று உறுதி சொற்களால் உரைக்கப்பட வேண்டும் என்று கல்வி உலகம் கருதுகிறது” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதேபோல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, இந்த புதிய கல்வித் திட்டம் வரவேற்கத்தக்கது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவர் பா.ஜ.கவில் சேர வேண்டுமென்று தான் இப்படி பதிவிட்டுள்ளார் என்று பலர் கமெண்ட் செய்து வரும் நிலையில் குஷ்பு ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்தும் கருத்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் இந்த புதிய கல்வித் திட்டத்தைப் பற்றி தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதாவது “புதிய கல்வித் திட்டத்தில் நாட்டின் GDP-யில் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போன்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில்‌ இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது”என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு சினிமா பிரபலங்கள் புதிய கல்வி திட்டத்தை பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/khushsundar/status/1288672658473639937?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus