குஷ்பு மீது நடிகை காயத்ரி ரகுராம் கடும் தாக்கு

  • May 15, 2020 / 11:44 AM IST

பிரதமர் மோடியை சாடிய நடிகை குஷ்புவை நடிகை காய்த்ரி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதுபற்றி மறைமுகமாக குஷ்பு விமர்சித்தார். நேரம் வீணா போச்சு.. சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன் என்று தங்லிஷில் குறிப்பிட்டிருந்தார். அதற்குத் தமிழக பாஜ பிரமுகர் எச்,ராஜா பதில் தரும் வகையில், குஷ்பு தமிழ் எழுதப் படிக்கக் கற்க வேண்டும் என்றார்.

Kushboo Vs Gayathri Raghuram1

அவருக்குப் பதிலடி தந்த குஷ்பு எனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும், டிவிட்டர் என்பது சர்வதேச அளவில் பார்க்கப்படுவது, அதனால் ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.இந்நிலையில் குஷ்புக்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம்.குஷ்பு ஒரு ஜோக்கர். பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்கிறார். பிரதமர் பேசியது தமிழகத்துக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவுக்கும் சேர்த்துத் தான் என்றார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus