“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. 1986-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘கலியுக பாண்டவுலு’. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கே.ராகவேந்திரா ராவ் இயக்கியிருந்தார். இதில் வெங்கடேஷிற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். இது தான் குஷ்பூ ஹீரோயினாக என்ட்ரியான முதல் படமாம். இதன் பிறகு 1988-ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார்.

‘தர்மத்தின் தலைவன்’ படத்திற்கு பிறகு நடிகை குஷ்பூவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காம ராஜன், சின்ன தம்பி’ என படங்கள் குவிந்து 100 தமிழ் படங்களுக்கு மேல் நடித்து விட்டார். குஷ்பூ தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2000-யில் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று குஷ்பூ கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் இருக்கும் ஒரு ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இந்த ஸ்டில்லை பார்த்துவிட்டு குஷ்பூவுக்கு என்ன ஆச்சு? என்று அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். ஆனால், இந்த ஸ்டில் குஷ்பூ நடித்து வரும் ‘மீரா’ என்ற புதிய டிவி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது தான். தற்போது, இந்த சீரியலுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Share.