நம்ம குஷ்பூவா இது?… ஜிகுஜிகுவென மின்னும் காஸ்டியூமில் எடுத்த ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!
August 28, 2021 / 04:55 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. 1986-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘கலியுக பாண்டவுலு’. வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கே.ராகவேந்திரா ராவ் இயக்கியிருந்தார். இதில் வெங்கடேஷிற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். இது தான் குஷ்பூ ஹீரோயினாக என்ட்ரியான முதல் படமாம்.
இதன் பிறகு 1988-ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்திற்கு பிறகு நடிகை குஷ்பூவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காம ராஜன், சின்ன தம்பி’ என படங்கள் குவிந்து 100 தமிழ் படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
குஷ்பூ தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2000-யில் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ. டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்நிலையில், குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.