தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘LKG, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு’ போன்ற பல தமிழ் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சுமோ, ஜோஷ்வா, மூக்குத்தி அம்மன், துருவ நட்சத்திரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
தற்போது, ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமரசாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர்.
இத்தகவலை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஃ பர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெகு விரைவில் இதில் நடித்து வரும் நடிகர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We at @VelsFilmIntl are happy to announce our next feel-good film #KuttiLoveStory, An Anthology Directed by @menongautham @vp_offl #DirectorVijay & #NalanKumaraswamy
Click to watch the promo: https://t.co/NIu90VXCu0#VelsFilmsNext @isharikganesh @Ashkum19 @DoneChannel1 pic.twitter.com/7BXcA8IjCz
— Vels Film International (@VelsFilmIntl) September 2, 2020
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.