‘குட்டி ஸ்டோரி’யில் வருண் – சாக்ஷி நடித்துள்ள ‘லோகம்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

  • February 13, 2021 / 09:26 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘LKG, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, மூக்குத்தி அம்மன்’ போன்ற பல தமிழ் படங்கள் வெளி வந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 12-ஆம் தேதி) திரையரங்குகளில் இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய படமான ‘குட்டி ஸ்டோரி’ ரிலீஸானது.

ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள குறும்படத்தில் வருண் – ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள குறும்படத்தில் அமிதாஷ் பிரதான் – மேகா ஆகாஷும், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அமலா பாலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அதிதி பாலனும் நடித்துள்ளனர்.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் வெங்கட் பிரபு இயக்கிய ‘லோகம்’ குறும்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus