அடேங்கப்பா.. விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

  • September 1, 2020 / 07:37 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். தற்போது, யூடியூபில் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் 7 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை ‘தளபதி’ விஜய்யே பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus