‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு… இயக்குநர் யார் தெரியுமா?
July 12, 2022 / 04:49 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார்.
பின், கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் மும்பையில் நடக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று நயன்தாராவின் 75-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம்.
இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். நயன்தாரா – நிலேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.