இன்ஸ்டாகிராமில் தான் செய்யப்போகும் புதிய தொழில் குறித்து பதிவிட்ட நயன்தாரா!
September 14, 2023 / 08:57 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸானது.
கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
தற்போது, நடிகை நயன்தாரா ‘9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை விற்பனை செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நயன்தாராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.