அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா!

  • July 24, 2023 / 04:58 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜவான்’ படத்துக்கு ரூ.8 கோடியும், நிலேஷ் கிருஷ்ணா படத்துக்கு ரூ.10 கோடி என்றும் நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில், நயன்தாரா தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.12 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus