‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டம்… விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

  • November 18, 2021 / 10:06 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) நடிகை நயன்தாராவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, நயன்தாராவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.