தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா . இவர் 20 ஆண்டை சினிமா துறையில் நிறைவு செய்துள்ளார். சொந்த வாழ்க்கையில் சில காலம் இவர் பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் பின்பு அதில் இருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .
சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. கல்யாணத்திற்கு பிறகு இவர் தனது 75-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு படத்தில் முக்கிய ரோல் கொடுக்க ஒரு சிலரிடம் அட்ஜெஸ் செய்யச்சொல்லி கேட்டதாகவும், ஆனால் அந்த சமயம் தனது நடிப்பு மீதான நம்பிக்கையால் துணிந்து நோ சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமா மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய சினிமாக்களிலும் ஒரு சிலர் இது மாதிரியான தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சூழல் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக பல பிரபலங்களும் தங்களது பேட்டியில் கூறி வருகின்றனர்.